shopify analytics ecommerce
tracking

Breaking News

\'GSTவரி விதிப்பால் சினிமாவுக்கு பாதிப்பு இல்லை\' - அபிராமி ராமநாதன்

By Pakka Admin - Aug 09,2017


\'GSTவரி விதிப்பால் சினிமாவுக்கு பாதிப்பு இல்லை\' - அபிராமி ராமநாதன்

திரையரங்குகள் பராமரிப்பு இல்லை, GSTவரி விதிப்பால்டிக்கட் கட்டண உயர்வு, அதனால் சினிமா பார்க்க வருபவர்கள் குறைந்து வருகிறார்கள். இதனால் டிக்கட் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று கூறி வரும் சூழலில் GSTவரி விதிப்பால் தமிழ் சி னிமாவுக்கு வசூல் பாதிப்பு இல்லை என்றார் தமிழ் சினிமா சேம்பர், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்.

இன்றைய இளைய தலைமுைறையினரின் ரசனைக்கு ஏற்ப உலகம் முழுவதும் தியேட்டர்கள் நவீன தொழில் நுட்பங்களால் மாறுதல் செய்யப்பட்டு வருகிறது. வட இந்தியாவிலும், ஹைதராபாத், பெங்களுர் சென்னை போன்ற நகரங்களில் மால் தியேட்டர் வளாகம் அதிகரித்து வருகிறது, தமிழ் சினிமா ரசிகன் தமிழகத்தில் அதிகமாக படம் பார்க்க கூடிய தியேட்டர்கள் நவீனப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து திரைப்பட துறையினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.

 சென்னை நந்தம்பாக்கம் தொழில் வர்த்தக வளாகத்தில் \"பிக் சினி எக்ஸ்போ \" கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை இக்கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றது கண்காட் காட்சியை குத்துவிளக்கு ஏற்றி அபிராமி ராமநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆசியா கண்டம் முழுமையும் உள்ள திரையரங்குகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் திரையரங்குகள் மாறுதல் மற்றும் நவீனப்படுத்துவது எப்படி என்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் அபிராமி ராமநாதன் பேசுகிற போது GST, கேளிக்கை வரி விதிப்பால் தியேட்டர் தொழில் நலிவடைந்து விடும் என்ற அச்சம் இருந்தது. இப்போது இல்லை. திரையரங்குகள் நவீனப்படுத்தி நல்ல சினிமாக்கள், மக்கள் ரசிக்க கூடிய படங்களை திரையிட்டால் வசூல் குவியும், எந்த வரி விதிப்பும் தொழிலை பாதிக்காது என்பதை சமீபத்தில் வெளியான படங்களின் வசூல் உறுதிப்படுத்தியுள்ளது என்றார். கேளிக்கை வரி சம்பந்தமாக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை என்ன முடிவு என்ற கேள்விக்கு இன்னும் சில தினங்களில் கேளிக்கை வரி சம்பந்தமாக நல்லதொரு அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறிய ராமநாதன் நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்களை பற்றி மட்டுமே எல்லா தரப்பினரும் கவலைப்பட்டுக் கொண்டு பேசி வரும் நிலையில் தமிழ் சினிமா தயாரிப்பு துறைக்கு பிரதான வருவாய் ஈட்டி தரக்கூடிய தியேட்டர்களை பற்றி கவலைப்பட்டு அதற்காக சிறப்பு கண்காட்சி ஒன்றை சென்னையில் நடத்திய தியேட்டர் வேர்ல்டு நிறுவன உரிமையாளர் ராகவ் அவர்களை பாராட்டுகிறேன் என்றார்.

தமிழகத்தில் தியேட்டர்களை நவீனப்படுத்தி சினிமா பார்க்க வரும்ரசிகனுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்க திரையரங்கு உரிமையாளர்கள் முயற்சிப் பார்கள் என்றார் அபிராமி ராமநாதன். தொடக்க விழா நிகழ்ச்சியில் அபிராமி ராமநாதன், கியூப் நிறுவன உரிமையாளர் செந்தில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஶீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


About Us

Pakkatv Live Web Tv. Entertainment, Cinema Trailers, Movie Songs, Film Interviews, Cinema Events, Live Webcast, Cinema Live Streaming, Film Personalities, Actors, Actoress, Music Directors, Short Films, Film Events, Funny Videos, dubsmash Videos, Prank Videos, YouTube Channel, Album Songs, Private Music, Cinema News, Film News, Comedy Scenes, Live Webtv, Yoga, Fitness, Weight Loss, Yoga Courses, Yoga Tips, Fitness classes, Diet, Lose Weight, Reduce Tummy, Fat, Nutrition, Surgery, Health, Health News, Medical, Hospitals, Clinics, treatments, medicines, operations, transplantations, Astrology, Rasi Palangal, predictions, astro signs, planet transistions, numerology, numbers, pilgrimage, bhakthi tours, faiths, rituals, kumbabishekams, tiruvizha, spiritual, spiritual news, cook & dine, home cooking, cooking classes, dining, restaurants, coffee shops, recipes, catering, cafe, cooking news, dining news, vegetarian, non-vegetarian, service, door delivery, beauty, fashion, beauty tips, homemade beauty tips, herbal beauty, fashion shows, ramp walk, lifestyle, lifestyle news, hotels, holidays, local tours, local photographers, local guides, travel news, travel website, travel portal, hotel stay, cheap hotels, best price hotels, home stay, serviced apartments, rooms, rating, quality score, Tv, Live Tv, Webtv, television, web television, online tv, online television, daily news, daily rasi palan, weekly rasi predictions, rasi palangal, net tv, net television, programmes,